Tuesday, March 27, 2012

ஆங்கிலத்திலிருந்து தமிழிலில் நபிகள் பெர்மானார் சரிதை


அறிஞர் MRM அப்துர்-ரஹீம் பல தன் முனைப்பு நூல்களை எழுதி
உள்ளார். ”இஸ்லாமிய கலைக் களஞ்சியத் தொகுப்பு” சிகரம்.

நபிகள் பெருமானாரின் வாழ்க்கைச் சரிதையை வசன நடையாகவும்
கவிதை வழியிலும் எழுதியுள்ளார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய பெருமானார் சரிதை “ MUHAMMAD the
PROPHET". சுமார் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலை “ இறைத்தூதர்
முஹம்மத்” என்ற பெயரில் நான் மொழிபெயர்த்துள்ளேன்.

2011 மே மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற
பன்னாட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இது வெளியிடப்
பட்டது.

இந்த நூலை மொழிபெயர்த்ததற்காக, நான் கற்ற ஸாஹிரா கல்லூரி
மற்றும் Sri Lanka Muslim Media Forum சார்பாக என் பள்ளித் தோழர் அல்
ஹாஜ் A.H.M.அஸ்வர் MP தலைமையில் ஒரு பாராட்டு விழா
நடத்தினார்கள். பாராட்டுடன் ஒரு பட்டமும் தந்தார்கள்.

“முத் - தர்ஜிம் மும்தாஸ் “ (அழகிய மொழியியலாளர்) என்பதுதான்
அந்தப் பட்டம். எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

No comments:

Post a Comment